பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/80 அன்று பேராசிரியர் நமச்சிவாய முதலியாரைப் பற்றி இரு வரும் வியந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சி லிருந்து பேராசிரியர் நமச்சிவாய முதலியார் பற்றிச் சில அரிய செய்திகளை அறிந்து கொண்டேன். முதன் முதலா கப் 'பொங்கல் விழாவே தமிழரின் தனிப்பெரும் பண்டிகை என்பதைப் பேசியும், எழுதியும் கொண்டாடியும் அறிமுகப் படுத்தியவர் நமச்சிவாயரே. இவர் வாழ்ந்த நாளில் ஆண்டுதோறும் தம் வளமனையான கடலகத்தில் பொங் கல் விழாக் கொண்டாடுவாராம். அவ்விழாவுக்கு வரு வோர்க்கு ஒவ்வொரு ஆப்பிள்பழம் கையுறையாக வழங்கு வாராம். முதன் முதலாக உதகமண்டலத்தில் "வளமனை" வாங்கிய தமிழறிஞர் இவரே. அந்த நாளில் உந்துவண்டி யொன்று சொந்தமாகக் கொண்டிருந்த தமிழாசிரியர் இவர். தமிழாசிரியர்கள் சம்பளத்தை அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்து ரூ 451-லிருந்து ரூ 75-ஆக உயர்த்திய வரும் இவரே. ஆவணக்களரி, அச்சகம் முதலிய இடங்க ளில் தமிழாசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்று கூறுவாராம். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பொறியியல், மருத்துவம் போன்ற கல்விகளைக்கற்க அர சாங்கம் வாய்ப்புகளே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். செல்வர் வீட்டுப் பிள்ளைகள் சட்டம் படித்து விட்டுத் தமி ழுக்குத் தொண்டுசெய்ய வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வாராம். நமச்சிவாயர், தமிழர் என்றும் நினைவு கூரத்தக்க தமிழறிஞர். பொங்கல் விழாவைத் தோற்று வித்து விளம்பரப் படுத்திய அவரை நாம் பொங்கல் நாளில் கூட நினைப்பதில்லை. D இன்று எனக்குக் கல்லூரி விடுமுறை ஆகையால் பகல் முழுதும் பாவேந்தரோடு கழித்தேன். அன்று மாலை |கடலகம் நமச்சிவாயர் வீடு, வங்கக் கடலைப்பார்த்துக் கட்டியது. தற் போது இவ்வீடு அவர் குடும்பத்தாரிடம் இல்லை. இதில் உணவு விடுதி இப்போது உள்ளது. இது கடற்கரையில் சென்னை வானெலி கிலையத் திற்கு அருகில் உள்ளது.