பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/88 நின்று விடுவேன். பின்னுல் வருபவ்ர்கள் எனக்கு உணர்த் திஞ்ல்தான் அவ்விடத்தை விட்டு நகருவேன். பார்ப்பவர் உள்ளத்தைத் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் அப்படத்துக்கு உண்டு. D ஒரு முறை நான் தஞ்சைக்குப் புகைவண்டியில் பயண்ம் செய்து கொண்டிருந்தேன். வண்டி மாயவரம் சந்திப்பை அடைந்தது. மாயவரம் சந்திப்பில் வண்டி அரைமணி நேரத்துக்கு மேல் நிற்பது வழக்கம். எனவே சந்திப்புக்கு வெளியே உள்ள ஒரு நல்ல விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கிளம்பினேன், நான் உணவு சாப்பிட்டுவிட்டுப் புகைவண்டிச் சந்திப்புக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது இரவு மணி 9 இருக்கும். அப்போது மாரியம்மன் திருவிழா என்று எண்ணுகிறேன். அம்மனைப் பூப்பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். பூவின் அலங்காரமும், மணமும் என்னை மெய் மறக்கச் செய்து விட்டன. போதாதற்கு நாதஸ்வர இசை வேறு. கைப்பையைச் சுமந்த வண்ணம் விடிய விடிய அப்பல்லக்கின் பின்னுலேயே சுற்றிக் கொண்டிருந் தேன். பிறகு விடியற்காலம் 5 மணிக்கு வேறு வண்டி பிடித்து ஏறித் தஞ்சை சென்றேன். நான் அப்போது காரைக்காலில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந் தேன். மாயவரத்தில் கிட்டப்பா என்ற பூக்கடைக்காரர் எனது நண்பர். அவர் சந்தனமும் விற்பார். நான் மாயவரம் போகும்போதெல்லாம் அக்கடையில் அமர்ந்து பொழுதைக் கழிப்பேன். 다. ஒரு முறை தேம்ைபேட்டைப் பொருட்காட்சியைக் காண் பதற்காக என் நண்பர்களோடு சென்றிருந்தேன். அந் நண்பர்களுள் சக்தி கிருஷ்ணசாமியும் ஒருவர். பொருட் காட்சியில் ஒரு சிற்பக் கடை இருந்தது. எல்லோராச் சிற்பங்களின் மாதிரிகள் அங்கு விலைக்கு வைக்கப்பட்டி