பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/88 என்னையும் என்ளுேடு புகைப்பிடித்துக் கொண்டிருந்த என் சகாக்களையும் பார்த்த அரவிந்தருக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்கும் போல் இருக்கிறது. என்னைப் பாரதியாருக் குக் காட்டி, 'யாரது? சுப்புரத்தனமா?' என்று கேட்டா ராம். அதற்குப் பாரதியார் "ஆமாம். சுப்புரத்தனந்தான். எல்லா செட்டிலேயும் இருப்பான்; ஆல்ை பெரியபுலவன்' என்று விட்டுக் கொடுக்காமல் கூறிஞராம். அதைக் கேட்ட பிறகு பாரதியாரின் மீது அளவுகடந்த மதிப்பு எனக்கு ஏற்பட்டு விட்டது. பாரதியார் பழைய கட்டுத் திட்டங்களை யெல்லாம் உதறி விட்டுப் பாமர மக்களுக்கும் புரியும்படி மிக எளிய முறை யில் கவிதை எழுதியது புதுவையில் இருந்த பழம் புலவர் களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் யாரும்பாரதியை மதிப் பது கிடையாது. பாரதியாரும் அவர்களைச் சட்டை செய்ய மாட்டார். எனக்குத் தமிழ் பயிற்றிய ஆசிரியர்களுள் ஒரு வரான பங்காரு பத்தருக்குப் பாரதியாரைக் கட்டோடு பிடிக்காது. ஏன்? அவரைப் பாரதியாரின் எதிரி என்றே சொல்லலாம். எப்போதுபார்த்தாலும் வருவோர் போவோ ரிடமெல்லாம் பாரதியாரின் பாட்டை எடுத்து வைத்துக் குறைசொல்லிக் கொண்டிருப்பார்; எதிர்ப்பிரசாரம் செய்து கொண்டிருப்பார். 'இவனெல்லாம் இங்கிலீஸ் படிச்சுப் புட்டுத் தமிழ்ப்பாட்டு எழுதருனுங்க. சுட்டுக்கு முன்னலே வல்லெழுந்து மிகுங்கற சாதாரண இலக்கணமே தெரி யல. "அங்கு கண்டான்’னு எழுதருன். இவனெல்லாம் கவியாம்' என்று என்னைக் கூப்பிட்டுச் சொல்லித் திட்டு வார். நான் இதைப் பற்றிப் பாரதியாரிடம் சொன்னுல், "அங்குக் கண்டான் என்று எழுதினுல் நன்ருகவா இருக் கிறது?’ என்று என்னைத் திருப்பிக் கேட்பார். "நன்ருக இல்லாவிட்டால் என்ன? இலக்கணப் பிழையில் லாமல் நாம் எழுத வேண்டாமா?' என்று நான் கேட் பேன். பாரதியார் பதிலுக்கு ஒரு சிரிப்புச் சிரிப்பார். அவ் வளவுதான்.