பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/89 நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நிறையக் கவிதை எழுதுவேன். பாரதியாரைச் சந்திப்பதற்கு முன் பாகவே நூற்றுக் கணக்கான தனிப்பாடல்களும் கீர்த்தனை களும் பழைய பாணியில் எழுதி முடித்திருத்தேன். மயிலம் முருகன் மீது நிறைய பக்திப் பாடல்கள் எழுதியிருந்தேன். சுப்பிரமணியர் துதியமுது வெளியாகியிருந்த நேரத்தில் ஒருநாள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருத்தேன். மயிலத்திலிருந்து ஒரு பக்தர் கூட்டம் உடம்பெல்லாம் திருநீறிலங்க சைவத் திருக்கோலத்தோடு என் வீட்டு வாசலுக்கு வந்து மிகவும் அடக்கமாக, 'கவி ஞர் கனக. சுப்புரத்தனம் வீட்டில் இருக்கிருரா?' என்று கேட்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் புகைச் சுருட்டைக் காலிலே போட்டு அனைத்துவிட்டு எழுந்து நின்று, ஏன்? நான்தான்!' என்று சொன்னேன். வந்த வர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் என்பது அவர்கள் முகங் களிலிருந்து தென்பட்டது. அவர்கள் என்னை வயது முதிர்ந்த ஒரு சிவனடியார் கோலத்தில் கற்பனை செய்து கொண்டு வந்திருக்க வேண்டும். என் தோற்றமும் செய லும் அவர்கள் எண்ணி வந்ததற்கு மாருக இருக்க வேண் டும். கீர்த்திக்கேற்ற மூர்த்தியாக நான் அவர்களுக்குத் தென்படவில்லை. எதுவும் பேசாமல் திரும்பிச் சென்று விட் L-6UI Tr . என்னுடைய பதிருைவது வயதில் நான் இன்பச் சுவை பொருந்திய லாவணிப்பாட்டு ஒன்று எழுதியிருந்தேன். அது ஒரு காதலன் தன் காதலியை அங்கம் அங்கமாக வருணித்துப் பாடுவதுபோல் அமைந்தது. கொஞ்சம் வண்டை வண்டையா இருக்கும். ஒரு நாள் பாரதியாரின் வீட்டு மாடிமேல் என் நண்பர்கள் சிலரோடு இருந்தேன். எல்லாரும் விடைப் பசங்க . என் லாவணியை அவர் tலாவணி என்பது நாட்டுப்புறங்களில் "டேப்' என்னும் தட்டையை ஒலித்துக்கொண்டு பாடப்படும் ஒருவகைப் பாடல். கும்மியைப்போல் இருக்கும், இன்றும் காமன் பண்டிகைகளில் லாவணி பாடுகிருர்கள்.