பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சுந்தரம் 一囚 அவள் எறிந்த வீணைச் சடலத்தின் மேல் மொய்த்துக்கிடக்கும் அநாதையான தாய்மொழிப் பாடல்கள் தனிப்பட்ட அனுபவங்கள் சிலருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் அவர்களை வெகுவாகப் பாதித்து, உணர்வுகளைத் தூண்டிக் கவிதையாக வெளிப்படுவதுண்டு. அந்த அனுபவம் நமக்கு இல்லாத காரணத்தால், அந்தக் கவிதை, படிக்கும்போது நமக்குப் புரியாத புதிராக இருக்கும். ஜெர்மானியக் கவிஞன் ரெய்னர் மேரியாரில்க்கின் சிறந்த கவிதைகளில் 'சிறுத்தை’ என்பதும் ஒன்று அக்கவிதை - கூண்டுக் கம்பிகளிடையே பார்த்துப் பார்த்து அதன் கண்கள் சோர்ந்து விட்டன அதன் கண்ணெதிரே ஆயிரம் ஆயிரம் கம்பிகள் அக்கம்பிகளுக்கு உள்ளேதான் அதன் உலகம் அடக்கம் என்ற உணர்வு மெதுவான பாதத்தின் வலிவான பதிப்போடு கூண்டுக்குள் அது வட்டமிடுகிறது மையத்தில் - தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்ட ஒரு பேராற்றவின் நாடடியமாக