பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-03) அது காட்சியளிக்கிறது சில நேரங்களில் ஒசையின்றி அதன் விழித்திரைகள் மேலே விரியும் அப்போது ஒரு காட்சி கண்வழி நுழைந்து இறுக்கமான அமைதி பூண்ட அதன் எலும்புகள் வழியாக இதயத்துக்குள் சென்றுமடியும் இளமையில் ருசியநாட்டில் சுற்றுப் பயணம் செய்து திரும்பிய ரில்க், "புனித ருசியா (Holy Russia) என்று அந்த நாட்டைப் பாராட்டி எழுதினான். சர்வாதிகார ஜெர்மனியில் தன்னுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட அவனால் இயலவில்லை. இப்பாடலில் தன் ஆற்றல்கள் எவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும், தன் கனவுகள் தனக்குள்ளேயே எப்படிச் செத்து மடிகின்றன என்பதையும் குறியீடாக வைத்துப் பாடுகிறான். இந்தப் பாடலில் மையத்தைச் சுற்றி நடனமிடும் GLTripsi (The dance of forces round a centre) argårp 905 கருத்தைக் குறிப்பிடுகின்றான். அப்பேராற்றல் நடம்புரியும் மையம் தனது இதயமே என்பது அவன் கருத்து. அந்த மையம் தனது இதயத்தில் நீங்காமல் இடம் பெற வேண்டுமென்றால், அது தன் அகக் காட்சிகளைப் புறக்காட்சிகளாக இடையறாமல் மாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இக்கருத்தை ரில்க்கே வெளியிடாமல் இருந்திருந்தால் படிப்பவர்க்கு எப்படிப் புரியும்? கிரேக்க இசைஞானி ஆர்ஃபிசைப் பற்றித் தான் எழுதியுள்ள கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இக்கவிதைகள் இறுக்கமும் சுருக்கமும் மிக்கவை; இவற்றை