பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கந்தரம் -இ ஆனால் ஹேம்லட்டைவிடப் பேச்சாற்றலும், கவிதையுணர்வும் மிக்கவன். டெஸ்டிமோனாவின் தந்தை பிரபான்சியோ, வெனிசு நகரத் தலைவர் முன் குற்றம் சாட்ட, அதற்கு அவன் பதிலளித்த போதும், டெஸ்டிமோனாவின் கற்பின் மீது இயாகோ களங்க்ம் கற்பித்ததைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட போதும், சாவதற்குச் சற்று முன்னும் ஒதெல்லோ பேசிய பேச்சுக்கள் அவன் சொல்லாற்றலைப் புலப்படுத்துகின்றன. ஒதெல்லோவின் கவிதையுணர்வு பல இடங்களில் ஊற்றெடுத்துப் பொங்கி வருவதைக் காணலாம். பிரபான்சியோவின் ஆட்கள் ஒதெல்லோவைத் தாக்கக் கத்தியை உருவியபோது, “உங்கள் ஒளிவீசும் வாட்களை உறையில் போடுங்கள். இல்லாவிட்டால் அவை பனித்துளி படிந்து துருப்பிடித்துப் போகும்' என்று கூறி நயம்படக் கேலி செய்கிறான். இயாகோ டெஸ்டிமோனா மீது களங்கம் கற்பித்த போது, “என் மனைவி தவறு செய்தாளா? என்னால் நம்ப முடியவில்லை! சுவர்க்கம் தன்னையே இழிவுபடுத்திக் கொள்கிறதா?’ என்று குமுறினான். தன் மனைவியைப் பழிவாங்கப் புறப்பட்டபோது, ‘கருங்கடல் அலையானது எப்படிப் பின்னோக்காமல் முன்னோக்கிச் சென்று பிரபாண்டிக்கிலும், ஹெலஸ்பாண்டிலும் விழுகிறதோ அதுபோல், இரத்தவெறியும் வேகத்தோடு முன்னேறுமே ஒழிய ஒரு போதும் பழைய காதலைத் திரும்பிப் பார்க்காது. சரியான பழிவாங்குதல் என்ற சங்கமத்தில் தான் சேரும்” என்று குறிப்பிடுகிறான். ஒதெல்லோவின் கவிதை உணர்ச்சியை வியக்காமல் இருக்க முடியாது. டெஸ்டிமோனாவைக் கொலை செய்வதற்கு முன் பேசிய ஒதெல்லோவின் படுக்கையறைப் Gess (Bedchamber speech) și gipsirea sisâangă Ribuib.