பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-டு) “கற்புள்ள் விண்மீன்களே! இவளைக் கொல்லும் காரணத்தை உங்களிடம் கூறமாட்டேன்! நான் இவள் இரத்தத்தையும் சிந்தமாட்டேன். பனியைவிட வெண்மையானதும், பளிங்குச் சிற்பத்தை விடப் பளபளப்பானதுமான இவள் மெல்லுடல் மீது சிறுகீறல் விழுவதைக் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாது; என்றாலும் இவள் இறக்கத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் எத்தனை ஆடவரை ஏமாற்றுவாளோ? ஓ தீபமே! உன்னை அணைத்தால் மீண்டும் என்னால் ஏற்ற முடியும். ஆனால் இயற்கையின் பேரழகுப் பெட்டகமான இவ்வஞ்சகியின் உயிர்விளக்கை அணைத்துவிட்டால், மீண்டும் எந்த நெருப்பால் அதை ஏற்ற முடியும்? இந்த ரோஜாவை நான் பறித்துவிட்டால், மீண்டும் அதைச் செடியில் வாழ வைக்க முடியுமா? வாடி உதிர வேண்டியதுதானே!. “ஒரே ஒரு முத்தம்! கடைசி முத்தம்! இவ்வளவு அழகான எதுவும், இவ்வளவு கொலை பாதகமானதாக இருந்ததில்லை. நான் அழவேண்டும்; ஆனால் இந்தக் கண்ணிர்த் துளிகள் கொடுமையானவை. இத்துயரம் தெய்வீகமானது. அன்பு எங்கு ஆட்சி செய்கிறதோ அங்கு அடியும் விழுகிறது.” என்று கண்ணிர் விட்டுப் புலம்புகிறான் ஒதெல்லோ, காதலும் வீரமும், கண்ணியமும் கவிதையுணர்வும் மிக்க காவியத் தலைவன் ஒதெல்லோ, எந்த இடத்தில் காலிடறி விழுகிறான் என்பது சிந்தனைக் குரியது. ஒதெல்லோ டெஸ்டிமோனாவின்பால் கொண்டிருந்த காதல் சாதாரணமானது அன்று, “ரோமியாவின் பிஞ்சுக் காதலை விட ஒதெல்லோவின் காதல் ஆழமானது” என்று திறனாய்வாளர் பிராட்லே ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். "நான் அரச குடும்பத்தைச் சார்ந்தவன்; நான் தரத்தால் எந்த வகையிலும் தாழ்ந்தவன் இல்லை: நான்