பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் काही என்று இயாகோ பேச்சு வாக்கில் வெனிசு நகரப் பெண்டிர் கற்பின் நொய்மையைச் சுட்டிக் காட்டி ஒதெல்லோவின் மனநோயை மரமாக வளர்க்கிறான். ஒதெல்லோ தன் மனைவி மீது தீராத ஐயங்கொண்ட மனநோயாளியாக மாறி, அவளைக் கொல்லும் எல்லைக்கே சென்று விடுகிறான். ஒதெல்லோ மனநோயாளியாக இல்லாமல் இருந்திருந்தால், அவன் சிந்தனையில் தெளிவு இருந்திருக்கும்; காரண காரியங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பான். அவன் மனநோயாளியாக இருந்த காரணத்தாலேயே, உண்மைகள் உணர்த்தப்பட்டபோது அவன் புரிந்துகொள்ள மறுத்தான். இதைத் திறனாய்வாளர் பிராட்லே கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் சுட்டிக் காட்டுகிறார்: “நான் உனக்கு அன்புப் பரிசாகக் கொடுத்த கைக்குட்டையைக் கேஷியோவுக்கு ஏன் கொடுத்தாய்?" என்று ஒதெல்லோ டெஸ்டிமோனாவைக் கேட்கிறான். “நான் கேஷியோவுக்கு அதைக் கொடுக்கவில்லை. நான் கொடுத்ததாகக் கேஷியோ சொன்னாரா?' என்று கேட்கிறாள் டெஸ்டிமோனா. "ஆம்! நீ கைக்குட்டையை அவனிடம் கொடுத்ததையும் சொன்னான்; நீ விபசாரி என்பதையும் சொன்னான்’ என்று சினத்தோடு கூறுகிறான் ஒதெல்லோ, “கேஷியோ அவ்வாறு கூறியிருக்க மாட்டார்; அவர் நேர்மையானவர்” என்று குறிப்பிடுகிறாள் டெஸ்டிமோனா. ஒதெல்லோ தெளிவான மனநிலை உள்ளவனாக இருந்திருந்தால், உடனே கேஷியோவை அழைத்து உண்மையை விசாரித்து அறிய முனைந்திருக்க வேண்டும். அவன் ’மனமயக்கம் அவ்வாறு செய்யவிட்ாமல் அவனைத் தடுத்துவிட்டது.