பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ வலிமையூட்டியது. ஊனமுற்றவள் உயிர்த்தெழுந்து நடந்தாள். தந்தைக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். பிரெளனிங்கும் அவளும் இத்தாலிக்குச் சென்று ஃப்ளாரன்சில் நிரந்தரமாகத் தங்கினர். தன்னைவிட ஆறாண்டுகள் மூத்த எலிசபெத்தோடு, பதினைந்தாண்டுகள் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தான் பிரெளனிங். அரும்பாக இருந்த பிரெளனிங்கின் கவிதையாற்றல், எலிசபெத்தின் தொடர்பால் மலர்ந்து உலகெங்கும் மணம் வீசத் தொடங்கியது. எலிசபெத்தும் சிறந்த கவிஞர். அவள் எழுதிய ‘போர்ச்சுகீசிய கீதங்கள்’ என்ற கவிதை நூல் ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது. அரசவைக் கவிஞர் வாய்ப்பும் அவளைத் தேடி வந்தது. அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரெளனிங் மீது தான் கொண்ட காதலைப் பற்றி உள்ள நெகிழ்ச்சியோடு எலிசபெத் தன் தங்கைக்குக் கீழ்க்கண்டவாறு கடிதம் எழுதியிருக்கிறாள்: “எங்கள் திருமணத்தால் அவரும் நானும் சில பாரம்பரிய உறவுகளை இழந்துவிட்டோம் என்பது உண்மை. ஆனால் நாங்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதலையோ நம்பிக்கையையோ இழந்துவிடவில்லை. அவை நாள் தோறும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அவர் எனக்கு உண்மையானவர்; நான் அவருக்கு உண்மையானவள். எங்கள் திருமணம் ஒரு சடங்கன்று; அழியாத உண்மை. நாங்கள் உள்ள ஒருமைப்பாட்டோடு ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; எங்களுக்காக நீ கடவுளுக்கு நன்றி சொல்” என்று எழுதுகிறாள். எலிசபெத் மீது கொண்ட காதலை பிரெளனிங் ஒர் அழகிய கவிதையாக்கி யிருக்கிறான். ஷெல்லி எழுதிய