பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சுந்தரம் -இ ஒரு கவியரங்கம் நடத்தினர். கவியரங்கத் தலைமை ஏற்க அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு கலைஞர் கருணாநிதி வந்திருந்தார். கவிஞர்கள் அப்துல் ரகுமான், ரகுநாதன், தி. கு. நடராசன், புலவர் இளஞ்செழியன் ஆகியோர் அக்கவியரங்கில் என்னோடு பாடியவர்கள். அதன் பிறகு அண்ணா கவியரங்கம் நாடெங்கிலும் கலைஞர் தலைமையில் பரவலாக நடைபெற்றது. தமிழ்க் கவியரங்க வரலாற்றில் பொற்காலம் என்று அதைக் குறிப்பிடலாம். பல்லாயிரக் கணக்கான மக்கள் கவியரங்கம் கேட்க ஆவலோடு கூடினர். மாவட்டந்தோறும், அண்ணா பிறந்தநாள் விழாக் கவியரங்கம் முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டில், அண்ணா கவியரங்கம் இடம் பெற்றது. நானும் கவிஞர் சுரதாவும் பந்தலின் ஒரத்தில் நின்று கவியரங்கைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். அப்துல் ரகுமான் பாடத் தொடங்கியதும் கூட்டத்தில் உணர்ச்சி வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்தது. வரிக்கு வரி கற்பனையும் சிலேடையும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுந்தன. அழுகின்ற போதும் மேகம்போல் அழுபவன்நீ விழுகின்ற போதும் விதையைப் போல் விழுபவன் நீ என்று அப்போது அவர் பாடிய வரிகள் கேட்டவர்களுடைய இரத்தத்தில் கலந்து இன்றும் ஒடிக்கொண்டிருக்கின்றன. அன்று அவர் பாடிய இந்திராணிச் சிலேடை (இந்திரர்கள் பலராம்; அவர் எத்தனைபேர் என்றாலும் ‘இந்தி ராணி மட்டும் எல்லார்க்கும் பொது மகளாம்)