பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு கந்தரம் 一囚 கவிஞர் திருலோக சீதாராம் கவிஞர் திருலோக சீதாராமை நான் முதன் முதலாக 1960இல் சேலத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி உங்கள் பெயர் திரிலோக சீதாராமா? திருலோக சீதாராமா?’ என்பது. ‘என் பெயர் திருவையாறு லோகநாத சீதாராமன் என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார். சேலத்தில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தைத் தொடங்குவதற்கு நானும் சேலம் கவிஞர் சேர, குமாரசாமியும் ஏற்பாடு செய்திருந்தோம். கவிஞர் சேர குமாரசாமி அமரன் அம்பிகாபதி என்ற காப்பியத்தை எழுதியவர். அந்த விழாவில் கலந்து கொள்ள பழம்பெரும் எழுத்தாளரான நாரண துரைக் கண்ணன், திருச்சிக் கவிஞர்கள் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், திருலோக சீதாராம், சிறுகதை எழுத்தாளர் பூரீரங்கம் ஏ.எஸ். இராகவன் ஆகியோர் வந்திருந்தனர். விழா சிறப்பாக நடைபெற்றது. அடுத்த நாள் எல்லாரும் ஒரு மகிழ்வுந்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனகல் காவிரி நீர் வீழ்ச்சிக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். இரண்டு நாளும் ஓயாத இலக்கிய மழை. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு திருச்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சிவாஜி அச்சகத்துக்குச் சென்று திருலோக சீதாராமிடம் பேசி மகிழ்வது என் வழக்கம். திருலோகம் ஒரு சுவைப் பேச்சர்.