பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ ‘வாத்தியார் அனுப்பியிருக்கிறாரா? வந்துவிட்டேன்’ என்று சொல்லி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு புறப்பட்டார் திருலோகம். அந்தச் சமயத்தில் பாரதியாரின் மனைவி செல்லம்மாள் அவ்வூரில் ஒர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பாரதிதாசனும் திருலோகமும் அவரைத் தேடிச் சென்றனர். வயது தளர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்த செல்லம்மாளைப் பார்த்ததும், பாரதிதாசன் அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்நிகழ்ச்சியைப் பற்றித் திருலோகம் என்னிடம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்ட காரணத்தால் பாரதிதாசனைச் செல்லம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாரப்பா நீ என்று கேட்டார் செல்லம்மாள். ‘என்னைப் புரியவில்லையா அம்மா! நான் தான் வாத்தியார் சுப்புரத்தனம்’ என்றார் பாரதிதாசன். சுப்புரத்தனமா? முரட்டுப் பயலாச்சே! இப்ப எப்படி இருக்கே?' என்று உரிமையோடு விசாரித்தார். சிறிது நரம் பழைய நாட்களைப் பற்றிப் பேசிவிட்டு இருவரும் திரும்பினோம்.” 1944ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. இது வானொலியில் நடைபெற்ற இரண்டாவது கவியரங்கம்; பாரதிதாசன் தலைமை. கவிஞர் ச. து. க. யோகி. பிச்சமூர்த்தி, திருலோக சீதாராம் ஆகியோரும் இக்கவியரங்கில் பங்கேற்றனர். .ே திருச்சி வானொலிதான் கவியரங்கம் நடத்திய முதல் வானொலி நிலையம். 1946ஆம் ஆண்டும் பாரதிதாசன் தலைமையில் திருச்சி வானொலியில் பாரதி பற்றி ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அப்போது அவர் பாடிய தலைமைக் கவிதைதான் புது நெறி காட்டிய புலவன்’ என்ற தலைப்பில் அவருடைய இரண்டாம் தொகுதியில் வெளியாகியுள்ளது. இக்கவியரங்கில் நாவலர் சோமசுந்தரபாரதி, கி.வா.ஜ. ஆகியோரும் கலந்து கொண்டனர்.