பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ காஷ்மீரும் காஷ்மீர் ரோஜாவும் நேருவை காஷ்மீர் ரோஜா என்று குறிப்பிடுவதில் உருதுக் கவிஞர்களுக்குக் கொள்ளை விருப்பம் காரணம், காஷ்மீரில் வாழ்ந்த புகழ்பெற்ற பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர் நேரு அவருக்குக் காஷ்மீர் மீதும் காஷ்மீரப் பண்பாட்டின் மீதும் அளவுகடந்த பற்றும் கர்தலும் உண்டு. அவருடைய முன்னோர்கள் காஷ்மீரை விட்டு உ. பி. யில் உள்ள அலகாபாத்திற்கு இடம் பெயர்ந்து அங்கேயே நிலைத்துவிட்டனர். ‘நெஹ்ரு’ என்ற காஷ்மீரிச் சொல்லுக்குக் 'கால்வாய்க் கரைக்காரர்’ என்று பொருள். நேருவின் முன்னோர்கள் புகழ்பெற்ற பெரும்புலவர்களாக மொகலாயப் பேரரசர்களின் அவையை அலங்கரித்தவர்கள். அப்போது, வளமான கால்வாய்க் கரையில் அவர்களுக்கு அரசு மானியமாக நிலம் ஒதுக்கப்பட்டது; கால்வாய்க் கரையில் செல்வாக்கோடு வாழ்ந்த அவரது முன்னோர்களின் பெயரோடு தெஹ்ரு’ என்ற அடைமொழியும் ஒட்டிக் கொண்டது. எனவே நேரு குடும்பத்துக்கும் காஷ்மீருக்கும் உள்ள உறவு புலனாகும். இந்த உறவே இன்றைய காஷ்மீர்ச் சிக்கலுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்கள் நமக்குச் சுதந்திரம் தந்தபோது, பிளவுபடாத இந்திய எல்லைக்குள் இருந்த சுமார் 500 குறுநில மன்னர்கள் தங்கள் விருப்பம் போல் இந்திய