பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம் குவீன்’ என்ற செடி கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தது. ஒரு கொத்தை ஒடித்து வந்து அவர் கையில் கொடுத்துவிட்டு நான் உறங்கச் சென்று விட்டேன். அம்மலர்க் கொத்தை நீண்ட நேரம் மூக்கில் வைத்து முகர்ந்து கொண்டிருந்தார். காலையில் எழுந்ததும் நான் கவிஞரின் படுக்கையறைக்குள் சென்றேன். அவர் நன்றாகத் துங்கிக் கொண்டிருந்தார். அவர் படுக்கைக்கு அருகில் ஒரு தாள் கிடந்தது; எடுத்துப் பார்த்தேன். இரவின் இளவரசி என்ற தலைப்பில் ஒரு கட்டளைக் கலித்துறை அதில் எழுதப்பட்டிருந்தது. கரவில் இருந்தொரு மங்கையென் மூக்கில் கடிமணத்தை வரவிடு கின்றாள், வரவில்லை என்னெதிர் வாயிதழைத் தரவில்லை உண்ணவும், என்றேன்என் தோழனும் தையலவள் இரவின் இளவரசிப் பெயர்ப் பூவென் றியம்பினனே. அழகோவியம் கவிஞன் ஒர் இயற்கைக் காட்சியைக் காணும்போது, அதன் அழகில் ஈடுபடுகிறான்; பின்னர் அந்த அழகில் தன்னையிழந்து மெய்மறக்கிறான். அந்த அழகுக் காட்சிகள் அவன் உள்ளத்தில் ஒவியங்களாகப் பதிகின்றன. தன் உள்ளத்தில் பதிந்த ஓவியக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்து நிலைபேறுடைய படிமங்களாக (image) ஆக்கி உலக மக்களின் நெஞ்சத்தில் நிறுத்துகிறான். கவிதையைப் படிக்கும் போதெல்லாம், இந்த அழகோவியங்கள் திரைப்படங்களாக நம் நெஞ்சத்தில் ஒடுகின்றன. பாரதிதாசன் தமது கவிதையில் அடுக்கடுக்காக ஒவியம் தீட்டுவதில் வல்லவர் மயிலின் தோகையில் எத்தனை ஒவியங்கள்!