பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)- முருகு கந்தரம் -இ செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயோ என்று பாடிய பாரதிதாசன், அந்தி வானத்தின் செங்கதிர்ப் பூச்சைக் குயிலின் நிறத்தோடு ஒப்பிட்டு எப்படி மகிழ்ந்திருக்கிறார் என்பது புலனாகும். - வீட்டில் புறா வளர்க்கும் பழக்கம் கவிஞர் பாரதிதாசனுக்குண்டு. புறாக்கள் முற்றத்தில் கூடி இரையுண்ணும் அழகை அருகில் அமர்ந்து நீண்ட நேரம் பார்த்துச் சுவைத்துக் கொண்டிருப்பார். புறாக்களின் வண்ணங்கள் அவருக்கு அத்துபடி அவ்வண்ணங்களை அடுத்தடுத்த படிமங்களில் அழகாகத் தீட்டுகிறார். இருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்; செவ்விதழ்கள் விரியாத தாமரை போல் ஓரிணை! மெல்லி யர்கள் கருங்கொண்டை! கட்டி ஈயம்! காயாம்பூக் கொத்து! மேலும் ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்! இப்பாடலில் வண்ணத்தையும் வடிவத்தையும் ஒருங்கே பதிவு செய்திருக்கும் நயம் போற்றற்குரியது. நாடகக் காட்சி இயற்கையின் படைப்புக்களான பறவைகளை, உயிரோவியங்களாகத் தீட்டிக் காட்டிய பாரதிதாசன், சில நாடகக் காட்சிகளையும் கவிதையில் வடிக்கிறார். நாடகம் என்பது உணர்ச்சி. மோதல்களின் வெளிப்பாடு. மாந்தரிடத்தில் காணப்படும் காதல், வீரம், அவலம், தாயன்பு, பகைமை, சீற்றம், போர்க்குணம் ஆகிய