பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ பெண்களிடம் சொல்லி விடாதே. அவர்கள் என்னை ஏசுவார்கள்’’ என்று மெதுவாக அதன் காதில் ஒதுகிறார். நல்ல வேளை கவிஞர் இதைக் கலாப மயிலான ஆண்மயிலிடம் தான் கூறினார். இதையே பெண்மயிலிடம் கூறியிருந்தால், கட்டாயம் அது கவிஞரைக் கொத்தியிருக்கும். கோழிச் சேவல் காதலர்க்கு எதிரி. அது நேரத் தெரியாமல் கூவி, அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் இயல்பினது. சங்கப் புலவர் முதல் பலர், தமது பாடலில் கோழியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கின்றனர் ஆனால் பாரதிதாசன் சட்டமன்றத்துக்கே சென்றுவிட்டார் சட்டமன் றம்கோழி வளர்ப்பதைத் தடைசெய்யுமா தொட்டார் கைதொட்டுத் தொடருமுன் - பட்டப் பகலாயிற் றென்று பறையடிக்கும் சற்றும் அகலார் அகலும் படிக்கு. பறவையும் தமிழும் பாரதிதாசனுக்குப் படுக்கையறையிலும் தமிழ் நினைப்புத்தான். சரக்கொன்றை தொங்கலிட்ட பந்தலின் கீழ், தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டிலின் மீது அருகில் படுத்திருக்கும் குடும்ப விளக்கிடம், இழந்தபழம் புகழ்மீள வேண்டும்; நாட்டில் எல்லாரும் தமிழர்களாய் வாழ வேண்டும்; வழிந் தொழுகும் சுவைத் தமிழே பெருக வேண்டும் மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும் என்று தமிழ்க்காதலைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் பறவைகளைப் பற்றிப் பாடும்போது தமிழை மறந்து விடுவாரா? பறவைபிடிக்கும் வேடன் பேசும் தமிழ்ச்சொற்கள் கவிஞரை