பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் -- இருந்தது என்று இகழ்ந்து கூறுகிறார். சாறு படிந்து பிசுபிசுத்த கண்கள்தாம் பலகறை போலத் தோற்றமளிக்கும். குடும்ப விளக்குத் தலைவியின் அதிகாலைப் பணியை - பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு கறந்தனள், வீட்டை நிறம் புரிந்தனள், செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்; பைம்புனல் தேக்கினாள்; பற்ற வைத்த அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக் குடிக்க இனிய கொத்து மல்லிநீர் இறக்கிப் பாலொடு சருக்கரை இட்டு, நிறக்க அன்பு நிறையப் பிசைந்த முத்தான வாயால் முழுநிலா முகத்தாள் அத்தான் என்றனள்; அழகியோன் வந்தான் என்று பட்டியலிட்டுக் காட்டும் பாவேந்தர் இருண்ட வீட்டுத் தலைவியின் காலைப் பணிகளை மங்கை தூக்கம் நீங்காது ஊன்றும் அடிகள் ஒய்ந்து தள்ளாடினாள்; உடைந்த பெட்டிமேல் கிடந்த பிட்டைத் தொடர்ந்துநாய் தின்பதும் தோன்ற வில்லை; நடந்து சென்றவள் நற்பசுவுக் கெதிர் கிடந்த சாணியைக் கிளறி எடுத்து மீந்தபாற் செம்பில் விழுந்து கரைத்துச் சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து தெருவின் குறட்டில் தெளித்தாள்; அவள்குழல் முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல்போல் மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது! வாலிழந்து போன மந்தி முகத்தாள் கோல மிடவும் குனிந்தாள்; தாமரை போல எழுதப் போட்ட திட்டம் சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம். அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது. பொன்னிறக் கதிரொடு போந்த பகலவன்