பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம் -(இ) நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமிழந்து நெஞ்சிலுர மிழந்து நிதியிழந்தோ மெந்தாயே! பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி நெஞ்சத்தை எண்ணி விஷப்புனலை நீக்கிவிட்டோம். என்று பாடி மதுவின் தீமைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். பிள்ளைப்பாட்டாக மதுவிலக்கு விடுகவி ஒன்றும் பாடுகிறார் கவிஞர். - ஈக்கள் எறும்புகள் எலிகள் பூனைகள் எருதுகள் குதிரைகள் பூக்கள் மரங்கள் செடிகள் கொடிகள் புளிகள் மிளகாய்கள். ஊக்கங் கெடவைத் துங்கள் பணத்தை ஒழித்துப் பாரதத்தை ஏக்கங் கொள்ள அறிவை மயக்குவ திவற்றில் எது சொல்வாய். இப்பாடலில் பன்மை விகுதியாகிய 'கள்' அடிதோறும் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இதில் குறிப்பிட்டவற்றுள் புளிகள்' என்பது விடை புளித்த கள்ளைச் சாப்பிட்டால் மயக்கம் கொள்வது போல் மயங்கிப் பின் தெளிவடைந்து விடையைக் கண்டுபிடிக்கிறோம். "நாட்டின் செல்வத்தில் பெரும்பகுதி சிலரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் உண்ணவும் உடுக்கவும் வகையில்லாது அவதிப்படுகின்றனர். நாட்டில் பொருளாதார சமத்துவம் தேவை. மக்களிடையில் பொருளாதார ஏற்றுத் தாழ்வு இருக்கின்ற வரையில் அகிம்சை முறையில் ஆட்சி நடத்துவது சாத்தியமில்லை’ என்றார் காந்தியடிகள். பொருளியற் சமன்மையையும், பாட்டாளி மக்களையும்பற்றிப் பாரதிதாசன் நிரம்பப் பாடியிருக்கிறார். ருசிய நாட்டையும் இலெனினையும்கூடப் பாராட்டிப் பாடி