பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 59 – பாவேந்தர் இந்த நாட்டின் ஒர் இலக்கியப் பாவலர் என்பதைவிட, இந்த நாட்டின் அடிமைத்தனத்திற்கே சாவு மணியடித்து, விடுதலைக்கு வித்திட்ட பாவலர் என்பதிலேயே நமக்குப் பெருமையும் பெருமிதமும் உண்டு. அத்தகைய உரி மையுணர்வுப் பாவலர் ஒருவரின் சிலையை ஒரு நாலாந்தரப் பாவலனின் சிலைபோல் கருதி நடந்துகொள்ள நினைப்பது, நமக்குப் பெருத்த இழிவும், நம் அடிமை மனப்பாங்கிற்கு உறுதியும் சேர்ப்பதாகும். இவ்வகையில் புதுவை ஆளுநர் மக்கள் உணர்வையே பெரிதாக மதிக்க வேண்டும் எ ன் று கேட்டுக்கொள்கின்ருேம். மதிப்பார் என்றும் நம்புகிருேம். அவர் அவ்வாறு மதித்து அவர் சிலைக்கு எவ்வகையான இட மாற்றமும் அதன் வழி இழிவும் நேரா வண்ணம் தம் ஆட்சித் திறத்தைக் கட்டிக் காத்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க் கின்ருேம். - தமிழர்களுக்குப் பாவேந்தர் பாரதிதாசனை விட நேரு அவ்வளவு பெரியவருமல்லர்; பெருமை உண்டாக்கியவரும் அல்லர். அவர் இந்த நாட்டின் முதலமைச்சராகவோ, விடு தலை முயற்சிகளில் பங்குகொண்டவராகவோ இருக்கலாம். ஆனல் அந்த நிலைகள், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் அடிமைத்தனத்தையும் வடநாட்டினர் மேலா ளுமையையும் உறுதி செய்வதற்கு உதவிய செயல்களாகவே கருதப்படும். அதேபோல்தான் காந்தியும் தமிழர்களின் அடிமைத்தனத்திற்கும், தமிழகத்தின் உரிமையெதிர்ப்புக்கும் வலிவூட்டுபவரே யாவர். எனவே தமிழ்மொழி, தமிழினம் தமிழ்நாடு என்ற அளவில் பாவேந்தர் பாரதிதாசன் மதிப் பிடற்கரிய, பெருமை மிக்க ஒரு விடுதலைப் பாவலர் ஆவார். அவர் பெயருக்கு இழிவு நேரும் எந்தச் செயலேயும் தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே, பாவேந் தர் சிலையை இப்பொழுதுள்ள இடத்திலிருந்து அகற்றவோ, வேறு ஓர் இடத்தில் கொண்டுபோய் வைக்கவோ, இப்பொழு துள்ள குடியரசுத் தலைவர் வழிநிற்கும் ஆளுநர் ஆட்சி இசை வளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்ருேம். அவ்வாறு