பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

 அன்பர் சொல்வதையோ-செய்வதையோ கவிஞர் மறுத்தால் அவர் கண்களில் நீர் ததும்பிவிடும். ஆகவே, கவிஞரும் இந்தப் 'பக்தி'க்குக் கட்டுப்பட்டுவிடுவார்.

உணவுக்குப் பின் உரையாடல் நிகழ்ந்தது; அன்பரைப் பார்த்து, “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்டார் கவிஞர்.

"எட்டுக் குழந்தைகள்" என்றார் அன்பர்.

“உங்களுக்கு வயது எத்தனை?”' என்றார் கவிஞர்.

"முப்பத்து ஐந்து" என்றார் அன்பர்.

’முப்பத்தைந்து-எட்டுக் குழந்தைகள்' என ஒரு முறை தனக்குள் கூறிவிட்டு, "இனிமேல் கொஞ்சம் அடக்கமாகத் தானே இருங்கள்” என்றார் கவிஞர். அவ்வளவுதான், எல்லோருக்கும் ஒரே சிரிப்பு!

"தவிப்பதற்கோ பிள்ளை?" என கர்ப்பத்தடையைப் பற்றி பாடியவர் அல்லவா? அன்பரும் சிரித்துப் புரிந்து கொண்டார்.


3
ஆகிற காரியமா?

ஒரு காரியத்துக்காக, பலருடைய ’தயவை’ நாடிச் சென்று அதை நிறைவேற்றிக் கொள்ளும் முறை கவிஞருக்குப் பிடிக்காது.

ஏதோ ஒரு விஷயம் பற்றி ஒரு நாள் தம்பியிடம் [மன்னர் மன்னன்] கவிஞர் சொன்னார்; தம்பி, ஸ்ரீதரன் என்பவரிடம் சொன்னார்; ஸ்ரீதரன், சுப்பிரமணியம் என்பவரிடம் சொல்லியிருக்கிறார், விஷயம் முடியவில்லை.