பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

பாடல் கற்றுக் கொள்ளப் போனவர் 'பள்ளி’ ஜாதியைச் சேர்ந்தவர்.

பாடல் கற்றுக் கொடுத்தவரோ ’இடையர்’ ஜாதியைச் சேர்ந்தவர்.

இரண்டு பாடல்களுமே ”ராம நாடகக் கீர்த்தனைகள்." அந்த இருவர் ஜாதியையும் கவிஞர் அறிவார். கவிஞரின் குறும்பு கருத்தோடும் நகைச் சுவையோடும் அமைந்தது.


8
நகைச் சுவையிலும் பகுத்தறிவு

கவிஞர் வாழ்க்கையிலே நிரம்ப நகைச் சுவை உண்டு. அந்த நகைச் சுவையிலே பகுத்தறிவு இழையோடும்.

யாராக இருந்தாலும் கவிதை இயற்றும் தகுதியுடையவரோ இல்லாதவரோ எதையாவது பாட்டு என்று எழுதிக் கொண்டு வந்து திருத்திக் கொடுக்கச் சொன்னால் கவிஞர் சிறிதும் வெறுப்பின்றி அவர்களுடைய மனம் கோணாமல் திருத்திக் கொடுத்து விடுவார்.

சில தொணப்பர்களும் பழமைப் பித்தர்களும் எதையேனும் எழுதிக் கொண்டுவந்து காட்டி கவிஞரைத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். அத்தகை யோரிடம் கவியரசர் தம்முடைய நகைச்சுவையைப் புகுத்திக் காட்டி விடுவார்.

ஒருவர், “காசியில் இறக்க முத்தி, கயிலையில் பிறக்க முத்தி..." இப்படியாக மூன்று அடிகள் எழுதிக் கொண்டு