பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மெளனமாகவே இருந்து விடுவார் வேறு சில சமயங்களில் அலுத்துக்கொள்வார். - பொதுவாக, தொண தொண என்று பேசுபவர்களே யும், உருப்படியாக எதையும் செய்யாதவர்களையும், வயிற்றுப் பிழைப்பைக் கருதி ஏதேனும் செய்பவர்களையும் அறவே வெறுப்பார். அவர்களிடம் கிண்டலாகப் பேசுவார். 'கலைத்தொண்டர் ஒருவர் ஒருநாள் கவிஞரைக் - வந்தார். அவர், "நான் ஒரு பெரிய மாநாடு கடத்தப் போகிறேன்; உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்" என்று கூறி தன்னுடைய வீரதீர்ப் பிரதாபங்களை அளந்து விட்டார். - - கவிஞர் சாவதானமாகப் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, 'நீ என்ன செய்தாலும் சரி; இப்பொழுது சரியான தொழில் எதுவும் இல்லாமல் இருக் கிருய் என்பது மட்டும் தெரிகிறது; அதனல்தான் இந்த மாநாடு எல்லாம்' என்ருர், தொண்டருக்கு வாயடைத்து விட்டது. முகத்தில் விளக்கெண்ணெய் வடிவதுபோல் ஆயிற்று. பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "என்ன, என்ன யெல்லாம் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள்" என்ருர் அந்தக் கலைத்தொண்டர். . . . . . . . 17 சைவமா? வைணவமா? பொதுவாக, உணவுப் பழக்கத்தைக் கூறுவதற்குச் சிலர் சைவம் என்பார்கள். - சைவம், மரக்கறி உணவு-இப்படியாகச் சிலர் கூறுவது வழக்கம்.