பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 வந்து, ஐஸ் கிடைக்கவில்லை என்பதை சோர்வாகக் கூறினார். கவிஞருக்குக் கோபம் அதிகம். தான் கேட்டது கிடைக்க வில்லை என்றால் கவிஞருக்கு உடனே கோபம் வந்து விடும். சிறிது நேரம் கழித்து அந்தக் கோபம் நகைச்சுவையாகவும் மாறிவிடும். “இதோ பாருங்கள்! இவர் சொல்கிறார்; காரைக்கால் முழுதும் ஐஸ் கிடைக்கவில்லையாம்' என்று அருகில் இருந்தவர்களிடம் கூறத்தொடங்கினார். பெரிய சாமிக்கோ வெட்கமாகிவிட்டது. 25. புது மாணவர் யார்? இளமையிலேயே புலமை வளம் பெற்றவர் கவிஞர் பாரதிதாசன். புதுவை அரசு கல்லூரி தமிழ் ஆசிரியர் தேர்வில் தம் பதினெட்டாம் வயதிலேயே புதுவையில் முதன்மையாகத் தேறி, தம்முடைய புலமையை வெளிப்படுத்தினார். கவிஞருக்கு அரசு உடனே ஆசிரியப்பதவி அளித்து, முதன் முதலில் காரைக்காலுக்கு அடுத்துள்ள நெரவை என்ற கிராமத்துப் பள்ளியில் அமர்த்தினார்கள். முதல் நாள் கவிஞர் பள்ளிக்குச் செல்கிறார், அந்தப் பள்ளியின் மாணவர்கள், கவிக் காளையைக் கண்டதும் 'யார் இந்தப் புது மாணவன்?' என்று ஒருவருக்கொருவர் வியப்போடு விசாரித்தவாறு இருந்தனர். பள்ளியில் வகுப்பு ஆரம்பமாயிற்று. பள்ளித் தலைமை ஆசிரியர் கவிஞரை வகுப்புக்கு அழைத்து வந்து, "இவர்தான் உங்கள் முதல் வகுப்பு ஆசிரியர்' என்று அறிமுகப்படுத்தினார். w -