பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அவ்வளவுதான்; மாணவர்களின் காணத்தைப் பார்க்க முடியவில்லை ஏன்? ஆசிரியருக்கு வயது பதினெட்டு! மாணவர்களுக்கோ பத்தொன்பது, இருபதுக்கு மேல் இருந்தது. 26 இவங்களுக்கு ரொம்பத் தெரியும் கவிஞருக்கு, வீட்டில் எந்தப் பொறுப்பும் இல்லை. எல்லாவற்றையும் கவிஞர் மனைவியாரும் மன்னர்மன்னனும் கவனித்துக் கொள்வார்கள். . - சில சமயங்களில் குழந்தையைப்போல, எதையேனும் செய்ய முற்படுவார். வேண்டாம் என்ருல் கேட்கே மாட்டார். அப்படி ஒரு இயல்பு கவிஞரிடம். - ஒரு சமயம் கொதிக்கும் எண்ணெயைக் கண்ணுடிப் புட்டியில் ஊற்ற முற்பட்டார் கவிஞர். "புட்டி உடைந்து விடும்' என்று மனைவியாரும் மற்றுமுள்ளோரும் கூறினர்கள். "இவங்களுக்கு ரொம்பத் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே கொதிக்கும் எண்ணெயை புட்டியில் ஊற்றி விட்டார். உடனே புட்டி உடைந்தது; எண்ணெயும் சிந்திவிட்டது. அதைப் பார்த்த கவிஞர் "ஆமாம், ஒடஞ்சி போச்சு' என்று கூறிவிட்டு பேசாமல் திண்ணையில் போய் உட்கார்ந்து விட்டார். 27 அவருக்கு நல்லாத் தெரியும் புதுவையில் கவிஞர் வாங்கிய வீட்டை, வசதியாகச் செய்ய எண்ணி, அந்த வேலையை தாமே முன்னின்று கவனிக்கத் தொடங்கினர் கவிஞர்.