பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவிஞரின் உள்ளத்தை அறிந்த உயிர் நண்பர் குயில் சிவாவும் அருகில் இருந்தார். கதவுக்குத் தாழ்ப்பாள் பொருத்தும் வேலையில் கவிஞர் ஈடுபட்டார். ஆணியோ மரத்தில் இறங்கவில்லை. எவ்வளவோ முயன்ருர் கவிஞர். X - குயில் சிவா உதவுவதற்கு முன்வந்தார். “எப்படியோ போய்த் தொலை” என்று கூறிவிட்டுப் போய்விட்டார் கவிஞர். . சிறிது நேரத்தில் சிவா தாழ்ப்பாளே பொருத்திவிட்டார். 'சிவா இதெல்லாம் எனக்கு வரலே; தமிழ் தவிர வேறு எதுவும் தெரியலே எனக்கு' என்ருர் கவிஞர் அவரைப் பார்த்து. . . . . . . . - . . பிறகு, "பாரப்பா, சிவா ரொம்பக் கெட்டிக்காரர். பூட்டுத் திறப்பது, தாழ்ப்பாள் பொருத்துவது இதெல்லாம் இவருக்கு நல்லாத் தெரியும்' என்ருர் கவிஞர். . . . சிவா சிரித்தார். ... 28 பாங்கியில்ஏன் போடவேண்டும்? எவ்வளவு ரூபாய்களானலும் சரி, அதைப் பாங்கியில் போட்டு வைத்து, தேவையான போது எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கவிஞர் விரும்புவதே இல்லை. -

  • அதென்ன? அங்கே கொண்டு போய்க் கொடுத்து, அப்புறம், அவனிடம் கையெழுத்துப போட்டுக் கொடுத்து, அவன் தயவுக்குக் காத்து சிற்க வேண்டும்?' என்று வெறுப்போடு கூறுவார். .