பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளுங்கள் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கிந்தனர் கதையை கடத்தச் செய்து, அதன் மூலம் நிதி திரட்டத் தீர்மானித்தார் ஒரு பள்ளிக்கூடத்தின் கிர்வாகி. கவிஞரிடம் அவர் வந்து விவரத்தைக் கூறி, கலைவாணர் வீட்டுக்கு அழைத்தார். கவிஞரைக் கூட்டிக் கொண்டு சென்ருல், கலைவாணர் தொகையைக் குறைத்துக் கொள்வார் என்பது நிர்வாகியின் கருத்து. - இருவரும் கலைவாணர் வீட்டுக்குச் சென்ருர்கள். கவிஞரைக் கண்டதும் மிக உற்சாகத்தோடு வரவேற்று உபசரித்தார் கலைவாணர். அதன்பின், கூடவந்தவர்ை அறிமுகப்படுத்தி, நிதி உதவிக்காக கிந்தனர் நாடகம் கடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டு, 'உங்களுக்கு நாடகத்துக்காக எவ்வளவு. தொகையோ, அதை அப்படியே பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினர் கவிஞர். கலைவாணரும் சம்மதித்து, ஒரு தேதி குறிப்பிட்டார். “உங்களைக் கூட்டிக் கொண்டு போனதற்குக் காரணம், கலைவாணர் தொகையைக் குறைவாக வாங்கிக் கொள்வார் என்பதற்காகத்தானே! நீங்கள் முழுத்தொகை யையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்ற கூறிவிட்லர்களே' என்று கேட்டேன் கவிஞரிடம். "அப்படி அல்ல; நாம் அப்படிச் சொல்லி விட்டால், அவருக்குத் தெரியும். அந்தத் தொகையை அப்படியே நிதிக்குத் தந்துவிடும் இயல்புடையவர். அல்லது போக்கு