பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? எங்கே போகிருர், என்ன பொருளே வாங்குகிருர், என்பதெல்லாம் கூடச் செல்வோருக்குத் தெரியாது. கவிஞரின் போக்கு அப்படி! ஒரு முறை வழியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு. துணிக் கடையில் நுழைந்தார் கவிஞர். பட்டுப் புடவை களைப் பார்க்க விரும்பினர். கடை விற்பனையாளரோ மிக மெல்லிய துணிகளை (உடுத்திக் கொண்டால் உடல் உறுப்புகள் முழுவதும் தெரியும்) எடுத்து விரித்துக் காண்பித்தார். கவிஞருக்கு வந்த கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு, “உனக்குச் சகோதரிகள் இருக்கிரு.ர்களா?" எனக் கேட்டு விட்டு கடையிலிருந்து புறப்பட்டு: விட்டார். ... . . . கடைக்காரர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். நானும் மன்னர் மன்னனும் புரிந்து கொண்டோம். 33 அதிகாரி யார்? டிப்டாப்பாக ஒருவர் உடையணிந்திருந்தார்; கவிஞ. ரிடம் வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப் பொழுது அங்கிருந்தோர் அவர் ஒரு அதிகாரி என நினைத்தார்கள். அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு, "அவர் யார்?" எனக் கேட்டனர். 'அர் மோத்துசிந்தம்" என்ருர் கவிஞர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதை அப்படிக் கூறினர். எல்லோருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.