பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இசையா? பொருளா? இசைவாணர்கள் பாடும்பொழுது, ராகத்துக்காக சொற்களைப் பிரித்து, பொருளேக் கொலை செய்து விடுகி ருர்கள். பொருள் முக்கியமா? இசை முக்கியமா? என கவிஞர் அடிக்கடி கூறுவது உண்டு. - . ‘எங்கோ மணம் வீசுது என்ற வரியை ஒரு இசை வாணர் எங் கோமணம் வீசுது என்று பாடினராம். பொருள் எப்படி வேறுபடுகிறது? கவிஞர் இதைச் சொல்லி சிரிப்பார். 35 கூட்டத்திலே ஒருவன்... 'கூட்டத்திலே ஒருவன் பித்தா பேயா எனத் திட்ட” என்ற வரியை, "கூட்டத்திலே ஒருவன் பி...... கூட்டத் திலே ஒருவன் பி......' என்று நீட்டி முழக்கி,'த்தா பேயா எனத் திட்ட” என்பதாகப் பிரித்துப் பாடினராம். இப்படி யாகச் சொற்களைப் பிரித்துப் பிரித்துப் பாடி பொருளைக் கொலை செய்கிருர்கள் என கவிஞர் மிகவும் வருந்துவது உண்டு. 36 பாடுவதே உம் பொறுப்பு! 1963 டிசம்பர் 81-ல் எழுத்தாளர் மாநாடு சென்னை மெமோரியல் மண்டபத்தில் நடைபெற்றது. கவிஞர் பாரதிதாசன் தலைமையில் கவியரங்கம் தொடங்கியது. பொருள்: "எல்லப் போர்' பற்றியது.