பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கூட்டிவரச் சொன்னது எதற்கு? வீட்டில் இருக்கும் போது கவிஞர் திடீரென ஏதே லும் வேலையில் ஈடுபட்டு விடுவார். மனைவியார் வேண்டாம் என்று கூறியபோதிலும் விடமாட்டார். அவர் விருப்பம் போல் ஏதாவது செய்வார். பார்த்த வேலையை முடி க்கவும் மாட்டார்; அப்படியே போட்டு விடுவார். குழந்தை மனம் உடையவர். ஒரு நாள் ஏதோ செய்ய முற்பட்டார் கவிஞர். (என்ன வென்று எனக்கு கினேவு இல்லை.)அப்படிச் செய்யக்கூடாது என குடும்பத்தினர் கூறினர். சிவாவை கூட்டி வரும்படி ஆள் அனுப்பினர் கவிஞர். சிவா வந்து பார்த்துவிட்டு, "ஆமாம், சுப்பு. அவர்கள் சொல்வது சரிதான்; அப்படிச் செய்யக் கூட ாது' என்ருர், "இதைச் சொல்வதற்காகத்தான், உன்னே கூட்டிவரச் சொன்னேன? போ, போ, என்று கடிந்து கொண்டார் கவிஞர். - சிவா, “நீ எப்போதும் இப்படித்தான்' என்று கூறிச் சிரித்தார். - 40 அதில் என்ன மாற்றம்? கவிஞரின் பாண்டியன் பரிசு வெளிவந்திருந்த சமயம். புதுமைப்பித்தன் அந்தக் காவியத்தைப் படித்துவிட்டு சிறு விமர்சனம் எழுதினர். - “பாரதிதாசனுக்கும் ஏனைய கவிஞரைப் போல் முடிவில் தர்மந்தான் வெற்றி பெறுகிறது. உலகின் தர்மா தர்மப் な -