பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பிரச்சனைகளில் அப்படித்தான?' என்று குறிப்பிட்டிருக் தார். புதுமைப்பித்தன் எழுதியிருப்பதைக் கவிஞரிடம் காண்பித்துக் கேட்டேன். அதைப் பார்த்த கவிஞர், “அதில் என்ன மாறுதல்? நன்மை செய்தவன் நன்மை பெறுவதும், தீமை செய்தவன் தீமை அடைவதும் இயல்புதானே' என்ருர். - 41 தோல்விக்கு ஆறுதல் மன்னர் மன்னன் பள்ளியில் படித்துக் கொண்டிருந் தான். பிரெஞ்சு மொழியும் ஒரு பாடம், 1944ல், (எந்த வகுப்பு என்பது கினேவு இல்லை) தேர்வில் தோல்வியுற்று விட்டான். அதை கினேத்து வருந்தி, அழுது கொண்டிருக் தான், சாப்பிடவும் இல்லை. - 'ஏன் அமுதுகொண்டிருக்கிருன்?" என்று கேட்டேன் கவிஞரிடம். தேர்வுபற்றிக் குறிப்பீட்டு, 'எனக்கு வருத்தமும் இல்லை; கோபமும் இல்லை. அந்தப் பாடம் மிகவும் கடின மானது; ஓர் ஆண்டு தங்கிப் படிப்பது மிகவும் நல்லதே' என ஆறுதலாகக் கூறினர் கவிஞர். - பொதுவாக, கோபித்து, வசைமொழி கூறும் பெற் ருேர்களைக் கானும் நமக்கு கவிஞரின் போக்கு வியப்பாகத் தான் இருக்கும்.