பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாரத்தில், பிரியாணி, பிரியாணி என ஒருவன் கூவிக் கொண்டு சென்ருன். கவிஞருக்கு பிரியாணி மீது ஆசை உண்டாயிற்று. அருகிலிருந்த இளைஞரிடம், “தம்பி ஒரு பொட்டலம் பிரியாணி வாங்கி வா' என அனுப்பினர். இளைஞரும் பிரியாணி விற்பவனைத் தொடர்ந்து சென்ருர், அவனே அந்தக் கடைசிக்குச் சென்று விட்டான். வண்டியோ நகரத் தொடங்கியது. கவிஞர் தவியாய் தவித்தார். கதவு அருகில் கின்று பார்த்தார். பிரியாணி வாங்கப் போன இளைஞரைக் காணவில்லை.அவ்வளவுதான், வண்டியிலிருந்து கீழே குதித்து விட்டார் கவிஞர். வண்டி பிளாட்பாரத்தை விட்டு தாண்டிக் கொண்டிருந்தது. பிரியாணி பொட்டலத்தோடு இளைஞர் ஓடி வந்தார். கவிஞர் நிற்பதைப் பார்த்து, “ஏன் ஐயா இறங்கி விட்டிங்க? நான் ஓடி வந்து ஏறியிருப்பேனே; பெட்டி படுக்கை எல்லாம் எங்கே?' என்ருர் - “நல்ல ஆள் ;ே நான் என்ன செய்வது? உன்னை விட்டு விட்டு நான் எப்படிப் போவது? ஒண்னும் தெரியலே; இறங்கி விட்டேன்' என்ருர் கவிஞர். - பெட்டி, படுக்கை சென்னை நோக்கிச் சென்று, கிலேயத் தில் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது. 54 கவிஞரின் தமிழ் உணர்வு பாவேந்தர் உடல் நலம் மிகவும் குன்றி சென்னை பொது மருத்துவ மனேயில் படுத்திருந்தார். சிறிது சிறிதாக நினைவு இழக்கும் கிலே. -