பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பிரிவதற்கு இரண்டு நாட்கள் முன், டாக்டர் மு. வ. பாவேந்தரைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்தார். மு. வ வந்திருப்பதாக பாவேந்தரிடம் கூறப்பட்டது. மு. வ. வைப் பார்த்த பாவேந்தர் புன்னகை செய்தார். உடனே கையசைத்து அருகில் வரச் சொல்லி, “அடுத்து நடைபெறக்கூடிய புலவர் குழுவின் கூட்டம் பெங்களுரில் நடைபெறப் போவதாக அறிந்தேன்; தமிழ் நாட்டின் இசைப் பாடகி திருமதி சுப்புலட்சுமியை அங்கே உள்ள தமிழ்ப் பகைவர்கள் பாட விடாமல் தடுத்துக் கலவரப் படுத்தி விட்டார்களே! அச் செயலுக்கு நான் கண்டனக் கூட்டம் நடத்தினேன். அங்கே போய் என் புலவர் குழு கூட்டத்தை கடத்த வேண்டும்? அங்கே போய் நடத்த வேண்டாம் என்று போய்ச் சொல்லுங்கள்' என கண்களில் ஒளிபடரக் கூறினர். இறக்கும் தருணத்தில் கூட தமிழ் உணர்வோடு பாவேந்தர் இருந்தார் என்பதற்கு இதுவே சான்று. - 55 குறும்புத்தனம் பாவேந்தர் இளம் பருவத்தில் குயில் சிவாவுடன் சேர்ந்து பல குறும்புத்தனங்கள் செய்வது உண்டு. - அவர்கள் தெருவில், அடுத்த நாள் நடைபெற இருந்த, மஞ்சள் நீராட்டு விழாவுக்காக முதல் நாள் வீட்டின் முகப்பில் வாழை மரம் தோரணம் கட்டியிருந்தார்கள். அன்று இரவு கவிஞரும் சிவாவும் சேர்ந்து அங்கே யிருந்த வாழைமரங்கள் தோரணத்தை வேறு ஓர் வீட்டில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு, ஊர்ச்சாவடியில் தங்கி