பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிலர், சிபார்சு செய்ய வேண்டும் என்று கேட்டு வரு வார்கள். - - - பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காகச் சிபார்சுக்கு. வருவார்கள். வருகிறவர்களிடம், “அவரை எனக்குத் தெரியாது; நான் சொன்னல் அவர் செய்யமாட்டார்' என்னும் சொற்களே கவிஞர் எப்பொழுதும் சொன்னதே இல்லை.

  • s

கூட்டிக் கொண்டு போய் உடனே சிபார்சு செய்வார். அரசியல்வாதிகள், மற்றும் சிபார்சு செய்வதே தொழி' லாகக் கொண்ட சிலர் போல எவ்வித சலுகையோ, சன் மானமோ பெறமாட்டார் கவிஞர். பெரியார், ஆர். கே. சண்முகம் செட்டியார், கலை வாணர், ஏ. இராமசாமி முதலியார், பி. டி. ராஜன் போன் றவர்களுக்கெல்லாம் சிபார்சுக் கடிதம் எழுதிக்கொடுப் பார் கவிஞர். - மற்றவர்களைப் போல் நாளே', 'அடுத்தவாரம்" என்று தவணை சொல்லமாட்டார். உடனே, "தம்பி தாளும் பேனவும் கொண்டு வா' என்று கூறி உடனே எழுதிக் கொடுத்து விடுவார். ஒரு சமயம் இதை நேரில் கண்டபோது, "இப்படி எழுதிக் கொடுக்கும் கடிதங்களுக்கு, அவர்கள் செய்கிருர் களா?' எனக் கேட்டேன். - "செய்கிருர்கள். செய்யவில்லை. என்ருலும், நான் வருத்தப்படுவதில்லை" என்ருர் கவிஞர்.