பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 தாயுமானவன் ஆகியோருக்கும் ஒவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திரு.இரங்கதைன், இரண்டாம் பரிசு பெற்ற திரு. வி. கணேசன், மூன்ரும் பரிசு பெற்ற திரு. இரா. மரியதாசன் ஆகியோருக்கும் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. செ. அரங்கநாயகம் அவர்கள் பரிசுகளே வழங்கினர். பாரதிதாசன் விருதுக் கவிஞர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு அளிக்கும் திட்டத்தைச் சென்ற ஆண்டு தமிழக அரசு அறிமுகம் செய்தது. உவமைக் கவிஞர் சுரதா சென்ற ஆண்டு பரிசு பெற்ருர். - இந்த ஆண்டு, மறைந்த கவிஞர்கள் வாணிதாசன், எஸ். டி. சுந்தரம் இருவரின் குடும்பத்தவருக்கும் தனித் தனியாக பத்தாயிரம் ரூபாய் பரிசை அரசு அளித்தது. வாணிதாசனுக்கு உரிய பரிசுத் தொகையை அண்ணுரின் மனைவி ஆதிலட்சுமி அவர்களிடமும், எஸ். டி. சுந்தரம் அவர்களுக்கு உரிய பரிசுத் தொகையை அடிரின் மகன் ராஜாவிடமும் வழங்கினர் கல்வி அமைச்சர். பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக்குறித்துச் சிறந்த நூல்களே எழுதிய ஆசிரியர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு அளிக்கும் திட்டத்தை இந்த ஆண்டு தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி “கவிஞரும் காதலும்' என்னும் நூலே எழுதிய புலவர் ந. இராமநாதன், புரட்சி முழக்கம் நூலே எழுதிய டாக்டர் சாலை இளந்திரையன், “பாரதிதாசன் கதைப் பாட்டு, “பாரதிதாசன் இலக் கியங்கள் ஆகிய நூல்களே எழுதிய டாக்டர் ச. சு. இளங்கோ, புரட்சிக்கு வித்திடும் பாவேந்தர் பாட்டு' நூலை எழுதிய திரு. மயிலைநாதன் ஆகியோர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசையும் சான்று இதழையும் பட்டாடை யையும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அளித்தார்.