பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 மன்னன் மட்டுமே எழுதினால் அது முழுமையாகி விடுமா? பாவேந்தருடன் நெருங்கிப் பழகியவர்கள் பலர். அவர்களில் சிலர் இன்று இல்லை; அவர்கள் எதையும் எழுதவில்லை; அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை மட்டும் கூறியுள்ளனர். அதுவும் பலருக்குத் தெரியாது.

பாரதிதாசனுடன் பலரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருக்கிருர்கள். அவர்களில் பலர் இன்றும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் எளிதில் ஒதுக்கிவிட எண்ணுவது பண்பும் அல்ல; புத்திசாலித்தனமும் ஆகாது. இதில் சுயநல நோக்கு ஊடாடக் கூடாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாவேந்தரோடு பழகியும் உதவியும் இருக்கின்றனர். ஒத்துழைப்பு நல்கியும் உள்ளனர். அவர்களை மறந்துவிடுவதும் ’இருட்டடிப்பு’ச் செய்வதும் நன்றி மறந்த செயலாகும்.

எதற்கும் விளம்பரத்தைத் தேடி ஒடும் காலம் இது! எதற்குமே ’தான் தான்’ என தன் தலையை நீட்டிக்கொண்டு திரிபவர்கள் மலிந்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன். விளம்பரத்தையே விரும்பாதவன். அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து அவ்வப்போது என்னால் இயன்ற பணிகளைச் செய்து மனநிறைவு கொள்பவன்.

பாவேந்தர் பாரதிதாசன் நூல்களை நான் முதலில் பதிப்பித்து வெளியிட்டேன் என்பதாக தமிழக அரசுக்கு சில உத்தமர்கள் பரிந்துரைத்து, 1979 ஏப்ரல் 29 இல் பாவேந்தரின் 89 ஆவது பிறந்தநாள் விழாவில் எனக்குப் பரிசும் விருதும் பட்டாடையும் கிடைக்கச் செய்தார்கள். ஆயினும் இவற்றை உத்தேசித்து அப்பொழுது 1944ல் நான் செயல்படவில்லை. என்னாலும் உண்மையை உணர்ந்து மதிப்பளித்த சில உத்தமர்களும் இருக்கிருர்களே என்பதை எண்ணும்போது உள்ளம் உவகையில் விம்மிதம் கொள்கிறது.