பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பாட முடியும். ஆனால், பாவேந்தர் காதலைப் பற்றிய பாடலில் காதலுக்குச் சமுதாயம் ஏற்படுத்தி வரும் தடை களைக் குறித்துப் பாடினர். காதலியைக் குறித்துப் பாடும்போது கூட, தொழிலாளியின் நினைவுதான் அவருக்குத் தோன்றுகிறது. நிலவைப் பாடும்போது கூட தொழிலாளியின் கினைவு தான் அவருக்கு ஏற்படுகிறது. - சோலையைப் பார்க்கும் போது கூட அதை உருவாக்கிட ரத்தம் சொரிந்த தோழர்களேக் குறிப்பிடுகிருர், சோலையைப் பார்க்கும்போது பூ தெரியும், பூவின் வாசம் தெரியும், பல கவிஞர்களுக்கு ஆல்ை பாரதி தாசனுக்கு பூங்காவை உருவாக்கிய தோழர்கள் தெரி கிருர்கள். “சித்திரச் சோலைகளே... எத்தனை ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே' என்கிரு.ர். 'தொழிலாளிகளுக்குக் கூலி கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுக்குப் பிச்சை கொடுக்கக் கூடாது" என்ற கருத்து உடையவர் பாரதிதாசன் அவர் தமிழை நேசித்தார்; தொழிலாளர்களே நேசித்தார். 6 தலைமை-நிறைவு விழாச் சொற்பொழிவுச் சுருக்கம் மாண்புமிகு நீதிபதி எஸ். மோகன் அவர்கள் நாட்டிற்குப் பயன்தரும் கவிதையைக் கொடுத்த கவிஞன் இருந்திருக்கிருன் என்ருல்-உழைப்பாளரின் உரிமைக்குக் குரல் கொடுத்த கவிஞன் ஒருவன் இருந்திருக்