பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புகழ் பரப்பியவர் காந்தியடிகளின் எழுபதாவது பிறந்த நாள் விழா வில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிட்ட நூலே முன்மாதிரியாகக் கொண்டு அதுபோன்ற ஒருநூல் பாரதிதாசனப் பற்றி திரு. முல்லை முத்தையா 19464ல் உரு வாக்கினர். அதன் விளைவாக மாறுபட்ட அரசியற் கொள்கை யுடையவர்களிடமும் பாரதிதாசனப் பற்றி தெரிவிக்கும் வாய்ப்பும், பாரதிதாசனப் பற்றி அவர்க ளுடைய கருத்துகளைத் தமிழ் மக்களுக்கு அறிவிக்கும் பேறு ஏற்பட்டன. நாவலர் சோமசுந்தர பாரதியார், மறை மலேயடிகள், திரு. வி. க. ஆகிய பேரறிஞர்களுடன் பாரதி தாசனுக்குத் தொடர்பு ஏற்படுத்தியவர் முல்லே முத்தையா அவர்கள்தான். 1948ல் சென்னையில் சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டி, பாரதிதாசனுக்கு நிதி கொடுக்க ஆக்கம் தேடியவரும் இவரே. அப்போது பாரதிதாசனுடைய நூல் களே அறிஞர் பலருக்கு அனுப்பி நாடெங்கும் அவரை முல்லை முத்தையா அறிமுகப்படுத்தினர். 18-3-1946இல் முல்லே முத்தையா அவர்களுக்குப் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பின்வரும் கடிதமும் இங்கே குறிப்பிடத்தக்கது. .சோமலெ தமிழ்வாணர், திரு. முத்தையா அவர்கட்கு முல்லைப் பதிப்பகம்-சென்னை. அன்புடையீர், நலம். தாம் அனுப்பிய கவி பாரதிதாசன் இயற்றிய செய்யுட் புத்தகங்கள் வந்தன. புத்துவகை தந்தன;