பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 "குடும்பவிளக்கு முதற்பகுதி உதவுக. இதுவரை இவர் கவி களேப் படித்து மகிழாமைக்கு மிகவும் வருந்துகிறேன். எல்லாம் நல்லனவாயினும் "அழகின் சிரிப்பு' என்ன அவருக்கு ஆளாக்கிவிட்டது. மாடப்புருவும் மடக்கிளியும் மானும் வானும் ஏடவிழ் பூ யாரோ டிருமலையும்-ஆடலயும் பாரதிரத் தம் கதையைப் பண்கனியப் பாடவிடும் பாரதிதாசன் புலமைப் பண்பு. lങ്കു அன்பன், $ 8 – 2 – 46 ச. சோ. பாரதி. 13. தால்வரில் முதல்வர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மலரும் மாலையும் காமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் "தமிழன் இதயம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாரதி தாசன் கவிதைகள்’, பாலபாரதி ச. து. சுப்பிரமணிய யோகியின் தமிழ்க் குமரி-இந்த நான்கு கவிதைத் தொகுதிகள் மட்டுமே பல ஆண்டுகளுக்கு முன் வெளி வந்தவை. பிரசித்தமானவை. இவற்றையே அக்காலத்தில் விமர்சித்து எழுதுவார்கள். - ஒவ்வொரு கவிஞரையும் ஒவ்வொரு சாரார் ரசித்து, பின்பற்றி, புகழ்ந்து பாராட்டலானர்கள். இராமலிங்கம் பிள்ளைக்கு தேசீய முத்திரையோடு தேசீயவாதிகளின் ஆதரவு கிடைத்தது.