பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தேசிக விநாயகம் பிள்ளைக்குப் பழைய பண்பாட்டி லிருந்து விலகிச் செல்ல விரும்பாத மிதவாதிகளின் ஆதரவு கிடைத்தது. ச. து. சுப்பிரமணிய யோகியாருக்கு இலக்கிய, சொல் நயத்தை விரும்பிய ஒரு சிலரின் ஆதரவு இருந்தது. மேலே குறிப்பிட்ட மூன்று கவிஞர்களும் அடி யெடுத்து வைக்கத் துணியாத புதிய துறையில் பாரதிதாசன் துணிந்து சென்ருர், அதனல், அவரை நாஸ்திகக் கவிஞர், பிரசாரக் கவிஞர், சுயமரியாதைக் கவிஞர் என்று அவருக்குப் பட்டம் குட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆலுைம் அவர் உறுதி தளராது பாடிக்கொண்டே இருந்தார். இளைஞர்கள், பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுள் ளோர் ஏராளமானவர்கள் பாரதிதாசனப் பின்பற்றத் தொடங்கினர். அப்பொழுது நான் ரங்கூனில் இருந்தேன். பாரதி தாசனின் சஞ்சீவிபர்வதத்தின் சாரலே விரும்பிப் படித் தேன். அதன் பின்னர் நான் சென்னை வந்து கவிஞருடன் தொடர்பு கொண்டு முல்லைப் பதிப்பகத்தை நிறுவி, கவிஞர் நூல்களே வெளியிட முற்பட்டேன். அந்தச் சமயம், திரு. சின்ன அண்மைலை அவர்கள் தமிழ்ப் பண்ணே மூலமாக நாமக்கல் கவிஞரின் நூல்களே வெளியிட்டுக் கொண்டிருந்தார். திரு. அ. லெ. நடராஜன் அவர்கள் புதுமைப் பதிப் பகத்தின் மூலம் கவிமணியின் நூல்களை வெளியிட்டார்.