பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இல்லத்தை நினைவு நூலகமாக்கி, அவர் குடும்பத்துக்கும் உதவி புரிந்தார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்தக் கவிஞருக்கும் இத்தகைய பெருமை கிடைத்ததில்லை. - கவிஞர் மறைவுக்குப்பின் எங்கிெங்கோ சிதறிக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 1978ல் பல நூல்களே வெளியிடச் செய்த கவிஞர் கோவேந்தன அவர்களுக்குப் பொன்னடையும் கேடயமும் வழங்கியது புதுவை அரசு. 'பாரதிதாசன் நன்ருகக் கவிபாடுகிருர் ஆல்ை, அவர் பிராமணத் துவேஷி' என்று சிலர் கூறுகிருர்கள். பாரதி தாசன் பிராமணத் துவேஷி மட்டுமல்ல; மதத்தின் பேராலும், ஜாதியின் பேராலும், தர்மத்தின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிருர்களோ, யார் யார் மற்றவர்களே ஏமாற்றுகிருர்களோ, யார் யார் பிறர் உழைப்பில் உண்டு இன்பம் அனுபவிக்கிருர்களோ அத்தனே பேர்களையும் துவேஷிக்கிருர் பாரதிதாசன்'இவ்வாறு உலகம் சுற்றிய தமிழர் ஏ. கே. செட்டியார் அவர்கள் 1944ல் குறிப்பிட்டார். ஆம் அது உண்மைதான் அந்தக் கொள்கையிலிருந்து கவிஞர் இறுதிவரை மாறவே இல்லை. -முல்லை பிஎல். முத்தையா 14 நான் கண்ட பாவேந்தர் பாவேந்தர் பாரதிதாசன் நேர்மையான உள்ளம் கொண்டவர்; அவருக்குச் சூழ்ச்சி தெரியாது; உண்மை யையே எப்பொழுதும் பேசுவார்; மற்றவர்களிடமும்