பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வேண்டும் என்ற துடிப்பு அதிகம். எப்பொழுதும் உற்சாக மாகவே காணப்படுவார்; எதற்கும் கவலைப்படமாட்டார்;. அச்சம் என்பதே அவரிடம் இல்லை. சத்தான-சுவையான உணவை விரும்பி உண்பார். சுவை மிக்க உணவு இல்லையானல் முகம் சுளிப்பார். தெரிந்த, நண்பர்கள் வீட்டுக்குப் போகும் போது தமக்கு விருப்ப மான பதார்த்தங்களே தயாரிக்கச் சொல்லி ஆசையோடு சாப்பிடுவார். கறி, முட்டை, மீன், இரால் முதலானவற்றை மிகவும் விரும்பிச் சுவைத்துச் சாப்பிடுவார். தம் அருகில் பலர் இருப்பதை எப்பொழுதும் விரும்பு வார்; ஆல்ை அதிகமாகப் பேசமாட்டார்; பேசும்பொழுது மெதுவாகவும் இனிமையாகவும் பேசுவார். . இலக்கணம், இலக்கியம், கவிதை பற்றி விளக்கம் கேட்டால் உடனே தெளிவாக உவமான உவமேயங்க ளோடு, சலிப்படையாமல் விளக்கிக் கூறுவார். அவர் கூறு வதைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார். அந்தச் சிரிப்பிலும் ஒரு கவர்ச்சி காணப்படும். கவிஞர் வாழ்நாளில் அவரைக் காணுதவர்கள் மிகவும் குறைவு. எளிதில் அவரைக் காணலாம்; பேசலாம்; பழக லாம். ஏழை-செல்வந்தர், சிறுவர்-பெரியோர், பாமரர்படித்தவர் என்ற வேறுபாடு பார்க்கமாட்டார். திடீரென கவிஞருக்குக் கோபம் உண்டாகும் சந்தர்ப் பங்களும் உண்டு. என்ருலும் அந்தக் கோபம் உள்ளத்தில் கிலேத்து கின்று வேறுபடுத்தி விடுவதில்லை. ர்ேகிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்ருேர் சினம் என் னும் முதுமொழி அவருக்குப் பொருந்தும். கவிஞருடைய கோபத்துக்கு இலக்காகாதவர்கள் அவருடன் நெருங்கிப் பழகாதவர்களே! சில சமயங்களில்