பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பால் கறுப்பானது ஏன்? பாரதியாரும் பாரதிதாசனும் பாரதியார் வீட்டு மாடியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது பாரதியார் மனைவி செல்லம்மாள் அவர்கள் வெளியூர் சென்றிருந்தார். ‘சுப்புரத்தினம், உங்களுக்குப் பால் காய்ச்சத். தெரியுமா?' என்று கேட்டார் பாரதியார். “ஒ, தெரியுமே' என்று கூறிவிட்டு, கீழே அடுக்களைக்கு வந்து பால் காய்ச்சினர் பாரதிதாசன். சிறிது நேரத்தில், ஏதோ சொல்ல கினேத்து பாரதியார் மாடியிலிருந்து வந்தார். ‘பால் காய்ந்து விட்டதா?” எனக் கேட்டார் பாரதிதாசனிடம். “பால் காய்ந்து விட்டது; ஆல்ை, பால் என்னவோ கறுப்பாகி விட்டது” என்ருர் பாரதிதாசன். (பாலேக் காய்ச்சுவதற்கு, அடுப்பில் காகிதங்களைப் போட்டு நெருப்பு மூட்டி ஊதியிருக்கிருர். எரிந்த காகிதத் தூள்கள் பறந்து பாலில் விழுந்து பால் கறுப்பாகிவிட்டது.) அதைக் கண்ட பாரதியார், “நம்மால் பாலைக் காய்ச்ச இயலவில்லையே. பெண்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சமையல் செய்கிருர்களே' என்று கூறினராம். அதன் பின்னரே, பெண் விடுதலை', 'பெண் சமத்துவம்' முதலான பாடல்களே பாரதியார் பாடத் தொடங்கினர் என்று கூறினர் பாரதிதாசன்.