பக்கம்:பாவைப் பாட்டு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது திருப்பாடல்

இரண்டாம் திருப்பாடல் பாசம் பரஞ்சோதிக் கெள் பாய்’ எனத் தொடங்குகிறது. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’ என முதற்பாட்டில் உரைத்த சிவபரம் பொருளை இப்பாட்டில் பரஞ்சோதி எனக் குறிக்கின்றார். இப்பாட்டும் உரையாடல் நெறியிலேயே அமைந்துள்ளது. மகளிர் முன்னால் பேசியதை நினைவு கொண்டு, “ஏடி அதனை மறந்தனையோ’’ என நினைவூட்டி எள்ளி நகை யாடுமாறு பாட்டின் உரையாடல் தொடங்குகின்றது.

போதார் அமளியில் புரண்டவளை நோக்கி, எழுப்பு தற்கு முயலும் மகளிர் கூறத் தொடங்குகின்றனர் : “மிகசி ‘சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே, நாம் பேகம் பொழுதெல்லாம் இரவும் பகலும் என் அன்பெல்லாம் ஒப்பற்ற பெருமான் ஒருவருக்கே என்று உரைப்பாயே. எப்போதிருந்து நீ மலர் பரப்பிய இப்படுக்கையிடத்து அன்பு கொண்டாய்’ என்று தோழியர் கேட்கின்றனர். ‘தோழி யரே, உங்கள் வாயில் இத்தகைய எள்ளற் சொற்கள் வரலாமா? விளையாடிச் சிரிக்கின்ற காலம் இதுவா?’ என்று அவர்களைத் தலைவி கடிந்துரைக்கின்றாள். உடனே அவரி கள். தேவர்களுக்கெல்லாம் பாராட்டக் கொடுத்தருள'நானு கின்ற திருவடிகளை, நம் பொருட்டு அடியார்க்கு எளிய வனாகி வந்து அளிக்கின்ற மெய்யுணர்வுத் தலைவன் தில்லைச் சிற்றம்பலத்து இறைவன். அவனுக்கு நாம் செலுத்தும் அன்பு எப்படிப்பட்டது என்று எண்ணுமாறும் அண்ணாமலைப் பெருமானின் திருவடிப் பெருமையினை நினைந்து போற்றுமாறும் எடுத்துரைக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/10&oldid=591706" இலிருந்து மீள்விக்கப்பட்டது