பக்கம்:பாவைப் பாட்டு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது திருப்பாடல்

மேலைத் திருப்பாட்டில் சிவபெருமானை விளித்தது போன்றே, இத்திருப்பாட்டிலும் மாணிக்கவாசகர், ‘திருப் பெருந்துறையுறை சிவனே’ என்கிறார். கிடைத்தற்கரிய அரும்பிறவி மனிதப்பிறவி என்று சொல்லப்படுவதற்கே காரணம், நல்லது இது கெட்டது இது என்று பொருள்களைப் பகுத்தறிந்து காணும் பகுத்தறிவு மனிதப் பிறவிக்கு வாய்த் திருப்பதோடு, இறைவன் உய்யக் கொள்வதற்கு இடமாக மனிதப்பிறவியை மாற்றிக் கொள்ளலாம் என்பர். ஏனெனில் ‘அவனருளாலே அவன்தாள் வணங்கும்’ வாழ்க்கை மனிதப் பிறவிக்கே உரியதாகும். பழந்தமிழர் கண்ட நெறியெனப் படுவது மக்களொடு மகிழ்ந்து, மனையறம் காக்க, மிக்க காமத்து வேட்கை தீர்ந்தால் தொலைவில் சுற்றமுடன் துறவறம் காப்பதாகும். இவ்வுலக இன்பத்திற்கு-சிற்றின் பத்திற்கு ஒர் எல்லையுண்டு என்று கண்டு, ஒருசில ஆண்டு களுக்குப்பின் பேரின்பநெறி நிற்கத் தலைப்படவேண்டும் என்பதாகும் என்பர். கற்றதனால் ஆய பெரும்பயனே கடவுளை வணங்குவதற்கு என்பர் திருவள்ளுவர்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் கற்றாள் தொழாஅள் எனின்

‘இசை என்ற சொல்லே இசைவிப்பது என விரியும். எனவே இன்னிசை வீணையர் வீணையில் இசை கூட்டி எழுப்பு கின்றார்கள். யாழ் வாசிப்பவர் ஒரு பக்கலிலிருந்து யாழை இனிமையுற இசைக்கின்றனர். இறைவன் வீணை இசைக்கும் யாழிசைக்கும் வயப்படுவான் என்பதனை மாணிக்கவாசகரே திருவண்டப்பகுதியில் (34) இன்னிசை வீணையில் இசைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/100&oldid=591708" இலிருந்து மீள்விக்கப்பட்டது