பக்கம்:பாவைப் பாட்டு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருப்பள்ளி எழுச்சி

தோன் காண்க என்று குறிப்பிட்டு விளக்கியுள்ளார். இஃது இவ்வாறு ஒரு பக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க, பிறிதொரு பக்கத்தில் இன்னிசையோடு மந்திரம் உச்சாடனம் செய்தனர்; தோத்திரம் ஒதினர் என்று உணர்த்தும் முகமாக, ‘இருக் கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்’ என்றார். இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் என வேதம் நான்கு வகைப்படும். இந்நான்கு வேதங்களும் வடமொழியில் அமைந்துள்ளன. தோத்திரப் பாக்கள் தமிழ்மொழியில் அமைந்துள்ளவை யாகும். சிவபெருமானுக்குத் திருக்குடமுழுக்குச் செய்யும் பொழுது மந்திரம் ஓதுதல் மரபென்பதனைத் திருநாவுக் கரசர் பெருமான்,

தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியின் நன்னீர் கொண்டிருக் கோதியாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி

என்றும்

மருதங்களா மொழிவர் மங்கையோடு

வானவரு மாலயனுங் கூடித் தங்கள்

சுருதங்களால் துதித்துத் துா ரோட்டித்

தோத்திரங்கள் பலசொல்லித் தூபங்காட்டி

என்றும் கூறியிருத்தலால் தோத்திரம் தமிழில்தான் அமைந் திருந்தது என்பதனை அறியலாம்.

இக்கருத்திற்கு மேலும் அரண்சேர்க்கும் வகையில் திருஞானசம்பந்தர்

சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால் என்றும்

கீதத் திசையோடும் கேள்விக் கிடையோடு வேதத் தொலியோ வாவீழி மிழலையே

என்றும் கூறியிருப்பதனைச் சுட்டலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/101&oldid=592143" இலிருந்து மீள்விக்கப்பட்டது