பக்கம்:பாவைப் பாட்டு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 101

நம்பியாரூரார் திருக்கலய நல்லூர்ப்பதிகத்தில்,

சொற்பால பொருட்பால சுருதியொரு கான்குக்

தோத்திரமும் பலசொல்லித் துதித்துத் தன்திறத்தே

கற்பாருங் கேட்பாருமாய் எங்கு நன்கார்

கலைபயில் அந்தணர்வாழுங் கலயால்லூர் காணே

என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு, அக்காலத்தே ஊர் தோறும் வடமொழி வேத சுலோகங்களும், தென்தமிழ்த் தோத்திரப் பாடல்களும் பாடப்பெற்றன என்னும் உண்மை யினை நாம் உணரலாம்.

சேக்கிழார் பெருமான் திருநாவுக்கரச நாயனார் புராணத்தில்,

அர்ச்சனை பாட்டேயாகும் சொற்றமிழ் பாடு கென்றார் துா மறைபாடும் வாயால்

என்று குறிப்பிட்டிருப்பது கொண்டும் இச்செய்தியின் உண்மையினை உணரலாம்.

“துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்’’ என்ற தொடர் இறைவனை வணங்கும் அடியவர் நிலையை அப்படியே புலப்படுத்திக் காட்டுவதாகும். அடுத்து, “தொழு கையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்’’ என்ற அடி அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் பெருமான் இறைவ னிடத்து ஆராத அன்பு செலுத்தி, தொழுகையராய்த் துலங்கிய பான்மையினைச் சேக்கிழார் பெருமான்,

கையும் தலைமிசை புனையஞ் சலியன

கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களுமுடன் உருகும் பரிவினபேறு எய்தும்

-பா, 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/102&oldid=592145" இலிருந்து மீள்விக்கப்பட்டது