பக்கம்:பாவைப் பாட்டு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருப்பள்ளி எழுச்சி

மெய்யும் தரைமிசை விழும்முன்பு எழுதரும் மின்தாழ் சடையொடு கின்றாடும்

ஐயன் திருகடம் எதிர்கும் பிடுமவர்

ஆர்வம் பெருகுதல் அளவின்றால்

என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு தெரியலாம். மேலும் சேக்கிழார் பெருமான் பத்தராய்ப் பணிவார் புராணத்தில் (6) சிவபெருமான் திருவடித் தாமரையினையே நினைந் துருகும் மெய்யடியார்களின் நிலையினை,

ஈசனையே பணிந்துருகி இன்பமிகக் களிப்பெய்திப் பேசினவாய் தழுதழுப்பக் கண்ணிரின் பெருந்தாரை மாசிலா றேழித்தங் கருவிதா மயிர்சிலிர்ப்பக்

கூசியே உடல்கம் பித்திடுவார் மெய்க்குணமிக்கார்.

என்றும் திருப்பாடல்வழிப் புலப்படுத்தியிருக்கக் காணலாம்.

‘சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்’ என்னும் தொடர் கைகள் இரண்டனையும் தலைமேல் வைத்து “ஹர ஹர சிவசிவ’ என்று ஆனந்தப் பரவசப்பட்டு நெக்குருகி நின்றாடும் திறத்தினைப் புலப்படுத்தும்.

இவ்வாறு அகங்குழைந்து காணப்படும் அடியார்கள் “என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்’ என்று இறுதியாக ஆனால் உறுதியாக வேண்டுகிறார்கள்.

பின் “எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே’’ என்று வழக்கம்போல் வேண்டி நிற்கிறார்கள். இந்திருப்பாடலில் அடியவர்கள் இறைவன் மாட்டுக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கும் நிலையினைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/103&oldid=592146" இலிருந்து மீள்விக்கப்பட்டது