பக்கம்:பாவைப் பாட்டு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது திருப்பாடல்

“பூதங்கள் தோறும் நின்றாய்” என்று திருப்பள்ளி யெழுச்சியில் ஐந்தாவது திருப்பாட்டு, ஐம்பூதங்கள் பற்றித் தொடங்குகின்றது. முன் திருப்பாட்டில் அடியவர்கள் சிவ பெருமானுக்குப் பணியாற்றுவான் வேண்டி, அவன்தன் வருகையை விருப்புடன் எதிர்நோக்கி நிற்றலைப் பற்றிக் கூறிய திருவாதவூரர், இப்பாட்டில் சிவபெருமான் தம் கண் முன் எழுந்தருளி வந்து, தன் மனமாசுகளைக் களைந்து, தமக்கு இன்னருள் புரியவேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் போக்கில் அமைந்திருப்பதனைக் காணலாம்.

‘கீதங்கள் வயல்திருப்பெருந்துறை மன்னா என்று முதற்கண் திருப்பெருந்துறைக் கோயிலில் குடிகொண்டிருக் கும் சிவபெருமானை விளிக்கின்றார். ‘நீர் பொருந்திய வயல்களாற் குழப்பட்ட திருப்பெருந்துறை என்னும் திருத் தலத்தின் அரசே’ என்பது இத்தொடரின் பொருளாகும். இத்தொடர் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கி நிற்கிறது. பிறவிக்குத் தம்மை உட்படுத்திக் கொண்ட உயிர்களின் வெப்பத்தைத் தணிவிப்பான் வேண்டி, அவன் குளிர்ச்சி நிறைந்த மருத வயல் சார்ந்த நிலங்களுக்கு அரசனாக அமர்ந்திருக்கின்றான் என்பதனைக் குறிப்பால் உணர்த்தி நிற்கிறது. இத்தொடர் எனலாம். அடுத்து, அவனையே அடைக்கலம் என்று கொண்டுவிட்ட அடியவர்களுக்கு எளிய வனாகவும், மற்றவர்களுக்கு அரியனாகவும் இருக்கின்ற தன்மையைப் புலப்படுத்துவான் வேண்டிச் சிந்தனைக்கும் அரியாய்” என்றார். பிறர்க்கு அரியவனாய் விளங்கும் ஆண்டவன் தனக்கு எளிவந்த தன்மையனாய் இருப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/105&oldid=592149" இலிருந்து மீள்விக்கப்பட்டது