பக்கம்:பாவைப் பாட்டு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 103

தோடு அல்லாமல், தன்னை ஆட்கொண்டு அருள்பாவிக்கும் திறமுடையவன் என்பதனைப் புலப்படுத்துவார் போல, * எம்பெருமான்’ என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு இறைவனை மூன்று வகையாக விளித்து அழைத்த பின்னர், அவனைக் கண்ணாரக் காணவேண்டும் என்னும் தம் வேட்கையை வெளிப்படுத்துவார் போல அவன் “பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர் தேங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்னும் தொடர் சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்கள் மாட்டும்-எங்கும் நீக்கமற நிறைந் திருக்கின்றான் என்பதனைப் புலப்படுத்தி நின்றது.

‘’ போக்கிலன் வரவிலன்’ என்பது ஆதியும் அந்தமும் இல்லாத நிலை போன்றதாகும். ‘போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே’ என்று சிவபுராணத்தில் (77) மாணிக்கவாசகரே குறிப்பிட்டிருக்கக் காணலாம். ‘பிறப்பி லார் இறப்பிலார்’ என்று அப்பர் பெருமான் இறைவனைச் சுட்டுதலும் இது கருதியேயாகும்.

நினைப்புலவோர் தேங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை’ என்ற தொடர் உன்னை நெக்குருகப் பாடி ஆடி உன்னைப் பலரும் புகழ்ந்து பேசுவதைக் கேட்டிருக்கிறோமேயன்றி உன்னை மெய்யாக் கண்டவரை, உன்னைக் கேட்டவரைக் கண்டிலோம் என்றார். இறைவன் கண்ணால்காணக் கூடிய ஒருபொருள் அல்லன் , கருத்தால், காரண காரியத்தால், அனுமானத்தால் உய்த் துணர்ந்து கொள்ளக்கூடிய நிலையிலேயே உள்ளான் என்பர். எனவே நீங்கள் நாங்கள் உணர்ந்து இறங்கி, நாங்கள் கண்டு கொள்ளும் நிலைக்கு அருளோடு வரவேண்டும் என்று வேண்டுகின்றார். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/106&oldid=592150" இலிருந்து மீள்விக்கப்பட்டது